கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
டெல்லி: கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமினை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமினை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தர்ஷனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷனுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது. தர்ஷனின் ஜாமினை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.