காஞ்சிபுரத்தில் கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : காஞ்சிபுரத்தில் கொளக்கி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை இணை ஆணையர், வட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வாலாஜாபாத் அருகே புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement