கேன் வில்லியம்சன் சர்வதேச டி20யில் ஓய்வு
ஆக்லாண்ட்: நியூசிலாந்து அதிரடி வீரரும் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியம்சன் (35), சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட தொடர் துவங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
Advertisement
நியூசி அணிக்காக 93 டி20 போட்டிகளில் ஆடியுள்ள வில்லியம்சன், ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியசிக்கப்பட்டார். ஓய்வு அறிவிப்பை அடுத்து, வரும் 5ம் தேதி, வெஸ்ட் இண்டஸ் அணிக்கு எதிராக துவங்கும் டி20 போட்டிக்கான நியூசி அணி பட்டியலில் வில்லியம்சன் பெயர் சேர்க்கப்படவில்லை.
Advertisement