கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு செல்லும் பாதையில் தேங்கிய மழைநீர்
*அகற்றிட சமூக ஆர்வளர்கள் கோரிக்கை
கந்தர்வகோட்டை : கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு செல்லும் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி உடனடியாக அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினசரி பள்ளி மாணவ- மாணவிகளும், கல்லூரி மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் ஆயிரகணக்கனோர் வந்து செல்லுகிறார்கள்.
இப்பகுதியில் எங்கும் பொது கழிவறை இல்லதாதல் கடைதெருவில் வியாபாரம் செய்பவர்களும் பேருந்து நிலைய கழிவறைக்குதான் செல்லும் சூழ்நிலை உள்ளது. தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பேருந்து நிலைய கழிவறை செல்லும் பாதை மழைநீர் சூழ்ந்து உள்ளதால் கழிவறை செல்லும் ஆண்களுக்கும், பெண்களுகும் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் தேங்கி உள்ள நீர்வடிய உரிய நடவடிக்கை அகற்ற சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.