பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் டிசம்பர் 8ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும் குடமுழுக்கிற்காக, சமீபத்தில் சுமார் ரூ.26 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். பார்வதி தேவி தவம் புரிந்த மாமரம் இந்த கோவிலில் தல விருட்சமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இதனிடையே, ஏகாம்பரநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு தமிழ்நாடு அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.26 கோடி செலவில் கோவிலில் புனரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு எப்போது என்ற தகவலையும் அமைச்சர் சேகர் பாபு இன்று தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்குப்பின் ஏகாம்பரநாதர் கோவில் குடமுழுக்கு நடைபெறுவதால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.