காஞ்சிபுரம் அருகே மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?
Advertisement
இந்நிலையில் கருப்படிதட்டடை ஊராட்சி நூலக முகப்பில் மாடுகளை கட்டி வைப்பதால் கழிவு மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நூலகத்திற்கு செல்வதை வாசகர்கள் தவிர்த்து வருகின்றனர். நூலகத்தில் தினசரி நாளிதழ்கள், பொது அறிவு புத்தகங்களை அதிகரிக்கவேண்டும். மேலும் நூலகம் தொடங்கப்பட்டதில் இருந்து புதிதாக புத்தகங்கள் வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்திற்கேற்ப மேம்படுத்தி புதிதாக புத்தகங்கள் வாங்கவேண்டும். சமீபத்திய தரவுகளுடனான பொதுஅறிவு புத்தகங்களை நூலகத்தில் அதிகப்படுத்த வேண்டும். நூலக முகப்பில் மாடுகள் கட்டப்படுவதை தடுத்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement