காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமம் ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Advertisement
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமம் முழுமையாக ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருந்து தயாரிக்க ஸ்ரீசன் பார்மா நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு ஸ்ரீசன் பார்மா மருந்து நிறுவனம் மூடப்பட்டது. ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் கடந்த ஆண்டு உரிய ஆய்வு செய்யாத 2 அதிகாரிகள் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
Advertisement