காஞ்சிபுரம் அருகே ரூ.4.5 கோடி பணத்தை காருடன் வழிப்பறி செய்த வழக்கில் கேரள இளைஞர்கள் 5 பேர் கைது!!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரூ.4.5 கோடி பணத்தை கருடன் வழிப்பறி செய்த வழக்கில் கேரளா இளைஞர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேரை பிடிக்கவும் ரூ.4.5 கோடி பணத்தை மீட்கவும் கேரளா தனிப்படை போலீஸ் விரைந்துள்ளது. மஹாசாஸ்தா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜாட்டின் என்பவர் கொரியர் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வாயிலாக கமிஷன் அடிப்படையில் நாடு முழுவதும் பணம் மற்றும் அதன் பொருட்களை அனுப்பி வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹோண்டா சிட்டி காரில் ரூ.4.5 கோடி வைத்து தங்கள் நிறுவனத்தில் இருவர் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை சவுகார்பேட்டைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் காஞ்சிபுரம் அருகே வந்தபோது மூன்று கார்களில் மர்ம நபர்கள் ஓட்டுனரை தாக்கிவிட்டு கத்திமுனையில்பணம் மற்றும் காரை கடத்தி சென்றனர்.
இந்த நிலையில், கடத்தப்பட்ட கார் ஆற்காடு அருகே சென்ற போது பணத்தை கொள்ளையடித்துவிட்டு அந்த காரை அங்கயே நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மும்பையில் இருந்து ஜட்டினிடம் தகவலை தெரிவித்ததன், அடிப்படையில் பொன்னேரிக்கரை போலீசாரிடம் இது சம்மந்தமாக புகார் அளிக்கப்பட்டது. எஸ்பி சண்முகம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது.
இதையடுத்து சிலநாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் கேரளாவுக்கு சென்று, அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களை சேர்த்த சுசீலால், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் 10 பேருக்கு சம்மந்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் கேரளா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.