சென்னை: நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திடீரென நேற்று சந்தித்தார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். வரும் 25ம் தேதி அவர் எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நேற்று காலை சென்று அவரை சந்தித்தார். அப்போது எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரஜினியிடம் அவர் காண்பித்தார். அவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து டிவிட்டரில் கமல்ஹாசன் கூறும்போது, ‘‘புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த்துடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்’’ என பதிவிட்டுள்ளார்.