கமல்ஹாசன் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பன்முகத்திறமையோடு தமிழ் திரையுலகை உலக தரத்துக்கு கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் - பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் வாழ்த்துகள். நாடாளும் ஆட்சியாளர்கள் நெறி பிறழாது நடந்திட, நாடாளுமன்றத்தில் முழங்கிடும் தங்களது அரசியல் தொண்டும் - திரையாளும் தங்களது கலைத் தொண்டும் மென்மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்.
* முதல்வருக்கு கமல் நன்றி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியை ரீட்விட் செய்த கமலஹாசன் ‘‘நல்லாட்சியின் அடையாளமாய், நட்பின் இலக்கணமாய்த் திகழும் அன்புக்குரிய நண்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்கள் வாழ்த்துடன் என் பிறந்தநாள் தொடங்குகிறது. அள்ளக்குறையாத அன்புக்கு நன்றி.