கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கான வசதிகள் குறித்த ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு 2 வாரம் கெடு!!
Advertisement
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில், ஆய்வுகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்," எனக் கோரிக்கை விடுத்தார். இதை. ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆகஸ்ட் 21ம் தேதி வரை தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், கல்வராயன் மலைப்பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் வழக்கில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், வனத்துறை தரப்பில் தனியாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
Advertisement