கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு
08:05 AM Jul 17, 2025 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள, அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். படுக்கை மெத்தை சேதமடைந்து, பச்சிளம் குழந்தையுடன் தரையில் படுத்திருந்த தாய்மார்கள் வீடியோ வெளியான நிலையில், ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். மருத்துவமனையில் இருந்த பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.