கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தவெக நிர்வாகிகள் புகுந்து அடாவடி: நோயாளிகள் அவதி
புஸ்ஸி ஆனந்துடன் 200க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் திரண்டு 5வது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் தவெக நிர்வாகியை சந்திக்க மருத்துவமனை பொது நோயாளிகள் பிரிவுக்குள் புகுந்து நோயாளிகளின் படுக்கை உள்ளிட்டவற்றின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியும், கூச்சலிட்டும் அடாவடியில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.