கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 33 சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
12:31 PM Aug 08, 2025 IST
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 33 சிறார்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். 2022ல் ஜூலை 17ல் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு 33 சிறார்கள் ஆஜராகினர். பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. ஆகஸ்ட் 22ல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது விழுப்புரம் இளஞ்சிறார் நீதிமன்றம்.