கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் புகார்.. ஜாமின் வழக்கில் காவல்துறை எதிர்ப்பு..!!
இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படகூடிய இந்த விவகாரத்தில் மருத்துவ ரீதியாக நிரூபிக்க முடியாது என்று அவர் வாதிட்டார். மேலும், கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேலாகியும் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரிக்கவில்லை என்றும், பல மாணவிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த மாணவியை தவிர வேறு எவரும் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீஜித் கிருஷ்ணா ஏன் சிறையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் சம்மன் அனுப்பி காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தலாமே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியத்தை கலைக்க வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக மறு மனு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.