கச்சிராயபாளையம் கோமுகி அணை அருகே ரூ.5 கோடியில் புதிய மீன் விதைப் பண்ணை
*எம்எல்ஏ, ஆட்சியர் துவக்கி வைத்தனர்
சின்னசேலம் : கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு மீன் விதைப்பண்ணையை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து ஆட்சியர் பிரசாந்த், உதயசூரியன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: மீன் விதைப் பண்ணையில் மீன் குஞ்சு நாற்றங்கால் தொட்டி, மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டி, மீன் குஞ்சு நிலைப்படுத்துதல் மற்றும் சிப்பம் கட்டும் அறை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, உட்புற சாலை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பண்ணை மூலம் மீன் வளம் பெருகுவதுடன் இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பொருளாதாரம் உயரும். இப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச்சத்துள்ள மீன்களை உண்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், சின்னசேலம் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அன்புமணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் தண்டபாணி, செயல் அலுவலர் விழிச்செல்வன், கவுன்சிலர் பழனி, மம்முபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.