தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடல் வலிமையோடு வீரத்தை வளர்க்கும் கபடி விளையாட்டு

தமிழ்நாட்டின் கிராமங்களில் முன்பு சடுகுடு என்று குறிப்பிடப் பட்ட தற்போது கபடி என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழர்களால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. இவ்விளையாட்டுக்காக கூடும் சிறுவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அணிகள் தீர்மானிக்கப்படும். அடுத்த நொடியே அணி பிரிவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். கூடியிருக்கிற சிறுவர்களில் வலிமையும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற இருவர் அணித் தலைவர்களாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Advertisement

உத்தி பிரிதல்: அணிக்குத் தேவையான உறுப்பினர்கள் உத்தி பிரிந்து வருவார்கள். இரு அணியிலும் சம எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன், யார் முதலில் ஆட்டத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்வதற்கு (டாஸ் போடுவது ‘மானமா?... மழையா... ?’ என்ற முறையைப் பயன்படுத்துவார்கள்.

வேறு பெயர்கள்: விளையாட்டுத் துறையின் அங்கீகாரம் கிடைத்து, சர்வதேச விளையாட்டாக மாறியபோதுதான் ‘கபடி’ என்ற பெயர் மாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும். இதற்கு சப்ளான்குடு, சப்ளான், சப்ளாஞ்சி என்னும் வேறு சில பெயர்களும் உண்டு.

ஆடுகளம்: சடுகுடு விளையாட்டுக்கான ஆடுகளம் மேடுபள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், மண் தரையாக அல்லது மரத்தூள், மணல், பஞ்சுமெத்தை பரப்பிய தரையாக இருக்கவேண்டும். கட்டாந்தரையாக (காங்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 13 மீ x 10மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11மீ x 8மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும் கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.

வீர விளையாட்டு: தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டுகளில் கபடி இன்றியமையாத ஒன்று. முதலில் விளையாடுமிடத்தில் கால்களாலேயே மண்ணில் எல்லைக் கோடுகளைக் கிழித்துக்கொள்வார்கள். இரு அணிகளாகப் பிரிந்து அவரவர் எல்லைக்குள் உறுப்பினர்கள் நிற்க, முதலில் விளையாட வேண்டிய அணியிலிருந்து ஆட்டத்தைத் தொடங்குபவர் …

நாந்தாண்டா ஒப்பன்

நல்லமுத்து பேரன்

வெள்ளி பெரம்பெடுத்து

வெளையாட வரேண்டா

தங்கப் பெரம்பெடுத்து

தாலிகட்ட வரேண்டா

வரேண்டா.. வரேண்டா... - என மூச்சு விடாமல் பாடியபடி, எதிரணி எல்லைக்கோடு வரை செல்வார். அப்படிச் செல்பவர் மூச்சை நிறுத்தாமல் திரும்பி வந்து நடுக்கோட்டைத் தொட வேண்டும். அவர் எதிரணியில் எத்தனை பேரைத் தொட்டுத் திரும்புகிறாரோ அத்தனை பேரும் ஆட்டமிழந்துவிடுவார்கள். வந்தவரை நடுக்கோட்டிற்குத் திரும்பவிடாமல் தடுத்துப் பிடித்துவிட்டால் பிடிபட்டவர் ஆட்டமிழப்பார். இதில் திறமையையும் வலிமையையும் நுட்பமாகக் கையாள்பவருக்கு வெற்றி கிட்டும். இரண்டாவதாகக் களமிறங்கும் அணியிலிருந்து தலைவனோ தலைவனால் அனுப்பப்படுபவரோ எதிரணியின்  எல்லைக்குள் செல்லும்போது

சப்ளாஞ்சி அடிக்கவே

சறுக்கிட்டு உழவே

ஒப்பனுக்கும் ஓயிக்கும்

ஒரு பணம் தெண்டம்

தெண்டம்... தெண்டம்... - என்று பாடியபடி ஆடுவர். இதுபோல் பல பாடல்கள் வட்டாரங்களுக்கேற்ப வேறுபடுவது உண்டு. ஒரு அணியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆட்டமிழந்தால் அந்த அணி தோற்றதாகக் கருதப்படும். தோற்ற அணி அடுத்த ஆட்டத்தை முதலில் தொடங்கவேண்டும். அவ்வாறு தொடங்கும்போது,

தோத்த கடைக்கு நான் வரேன்

தொட்டு பார்க்க நான் வரேன்

கருவாட்டு முள்ளெடுத்து

காதுகுத்த நான் வரேன்

நான் வரேன்...நான் வரேன்... - என்று பாடுவது உண்டு. விளையாடக் கிடைக்கும் நேரத்திற்கேற்ப இரண்டு, மூன்று ஆட்டங்கள் விளையாடுவர். கபடி பெரும்பாலும் மாலை அல்லது முன்னிரவு நேரங்களில் விளையாடப்படும்.

வரலாறு: இந்த ஆட்டத்தை சங்ககாலப் போர் முறையின் எச்சமாகக் கருதுகின்றனர் நாட்டுப்புறவியலாளர்கள். தம் நாட்டின் மீது படையெடுத்து வரும் எதிரி நாட்டவனின் மூச்சை அடக்கி புற முதுகிட்டு ஓடச்செய்வதையும், ஒருவன் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அங்குள்ளோரை அடித்து வெற்றி காண்பதையும் பாவனையாக வெளிப்படுத்துவதாக கபடியின் ஆட்டக் கூறுகள் அமைந்துள்ளன. தமிழின் பண்பாட்டு ஆவணமாகத் திகழும் தொல்காப்பியம் அகம், புறம் என காதலுக்கும் வீரத்துக்கும் இலக்கணம் வகுத்துள்ளது. அவற்றுள் புறத்திணைகளில் ஒன்றான வெட்சித் திணை மற்றும் அதன் துறை களில் கூறப்பட்டுள்ள போர்முறைகளில் ஒரு சில முறைகள் கபடி ஆட்டத்தின் கூறுகளோடு ஒப்பிடத் தக்கவையாகும். கபடி ஆட்டத்தில் சத்தமாகப் பாடப்படும் பாட்டொலி, எதிரணியின் எல்லைக்குள் சென்று ஆடுதல், அங்குள்ள எதிரணியினரைத் தொட்டு ஆட்டமிழக்கச் செய்தல், பிடிக்க வருபவர்களிடமிருந்து மீளுதல் ஆகிய கூறுகளெல்லாம் வெட்சியின் துறைகளாகக் கூறப்படும் ‘பசுக் கூட்டங்களைக் கவர்தலுக்கு எழுகின்ற பேரொலி, புறத்திடத்தில் சென்று சூழ்ந்து தங்குதல், தங்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், எதிர்ப்பவர்களைப் போரிட்டு மீளுதல் ஆகிய கூறுகளோடு ஒப்பிடத் தக்கவையாகும்.

சடுகுடு உலகக்கோப்பை: சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வெற்றியாளராக இருந்து வருகிறது. இருமுறை இரண்டாவதாக வந்து அடுத்த மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இரண்டாவதாக வந்தது.

பயன்கள்: இந்த விளையாட்டு மூலம் வீர உணர்வு வளரும், சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளரும், உடல் வலிமை பெரும், தமிழரின் போர் மரபுகளை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்ள உதவும்.

- புகழேந்தி

Advertisement

Related News