ஜூனியர் உலக ஹாக்கி டிக்கெட்டுகள் இலவசம்
மதுரை: தமிழ்நாட்டின் சென்னை, மதுரை நகரங்களில் வரும் 28ம் தேதி முதல், டிசம்பர் 10ம் தேதி வரை, ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி வரலாற்றில் அதிகபட்சமாக, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகளை காண டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என, ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
Advertisement
இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கீ நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஹாக்கி போட்டிகளை காண டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், இளம் தடகள வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், ஹாக்கி ரசிகர்கள் அனைவரும் ஹாக்கி போட்டிகளை காண்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement