ஒன்றிய அரசில் 1340 ஜூனியர் இன்ஜினியர்கள் : ஸ்டாப் செலக்சன் தேர்வு அறிவிப்பு
வயது: 01.08.2025 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சென்ட்ரல் வாட்டர் கமிஷன்/சென்ட்ரல் பப்ளிக் வொர்க்ஸ் டிபார்ட்மென்ட் பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் ஆகிய முக்கிய பொறியியல் பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., அல்லது 3 வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் பெற்றிருப்பது, விரும்பத்தக்கது.
ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஸ்டாப் செலக்சன் தேர்வு 2 தாள்களை கொண்டது.
முதல் தாள் ‘அப்ஜக்டிவ் டைப்’ (கொள்குறி வகை) கேள்விகள் அடிப்படையிலும், 2ம் தாள் விரிவான விடையளிக்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.
தாள்-1 க்கான தேர்வு வருகிற அக்.27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், தாள்-2 க்கான தேர்வு ஜனவரி 2026 லும் நடைபெறும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.100/-. பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.
www.ssc.gov.in அல்லது www.sscsr.gov.in என்ற இணையதளங்கள் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.07.2025.