தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடம், தட்டு, சேலை கொடுத்து ரோடு ஷோ-வுக்கு ஆள் திரட்டிய இலைத்தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊருக்கு புதிய மாவட்ட செயலாளரை அறிவிச்சும் வெளியே காட்டாமல் வைச்சிருப்பது இலைக்கட்சி தொண்டர்களுக்கு சந்கேத்தை ஏற்படுத்தி இருக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
Advertisement

‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் கப்சிப்பென அமைதியாகவே இருக்காங்களாம்.. இந்த மாங்கனி மாநகர செயலாளராக இருந்தவரின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், ரெண்டு பேர் பொறுப்பாளராக இருந்தாங்களாம்.. இதில் ஒருவருக்கு செயலாளர் போஸ்ட் கிடைச்சதாம்.. அவரும் நீண்டகால கட்சிக்காரர் தான் என்றாலும் தொண்டர்களை பார்த்து எந்த புன்முறுவலும் கிடையாது என்றாலும் எந்நேரமும் விரைப்பாகவே இருக்காராம்.. இப்படி பல்வேறு காரணங்களால் அவரை ஏற்றுக்கொள்ள மூத்த கட்சிக்காரங்க யாரும் தயாராக இல்லையாம்.. இருந்தாலும் வெளிப்படையாக இதனை சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லன்னு தொண்டர்கள் சொல்றாங்க.. அவர்களும் ஓடிஓடி கட்சிக்காக உழைக்காமல் வந்து செல்லும் நபர்களாக இருப்பதால் இலைக்கட்சி தலைவரின் இதயமாக இருக்கும் பொறுப்பாளர் ஒருவர் தான் ஓரம்கட்டி வச்சியிருக்காராம்.. அதேநேரத்தில் அவர்கள் அமைதியாக இருப்பதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்குதாம்.. விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், எதையாவது பேசி வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாகிவிட கூடாது என்பதுதானாம்.. இந்த பட்டியலில் 10 பேர் இருக்காங்களாம்.. அதே நேரத்தில் புதிய மா.செயலாளரை ஏன் வெளியே அறிமுகப்படுத்தவில்லை என்ற கேள்வியையும் தொண்டர்கள் எழுப்புறாங்களாம்.. புதிய மா.செ. அறிவித்தவுடன் அவரை அழைத்துச் சென்று ஏன் மம்மி சிலைக்கு புஷ்பமாலை போடவில்லை. அவரை முன்நிறுத்தி பின்னாடி இருந்து யாராவது இதில் பலனடைய பார்க்கிறார்களா என்ற கேள்விதான் இலைக்கட்சி தலைவரின் ஊரில் தொண்டர்களின் மத்தியில் எழுந்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி தலைவரோட ரோடுஷோவுக்கு கூட்டம் காட்ட குடம், தட்டு, சேலைன்னு கொடுத்து ஆட்களை திரட்ட வேண்டியதாகி போச்சாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல இலைக்கட்சி தலைவரோட எலக்சன் பிரசார டூர்க்கு பொதுமக்கள்கிட்ட மட்டுமல்லாம கட்சி தொண்டர்களிடமும் பெருசா வரவேற்பு இல்லையாம்.. 2வது நாள் நடந்த ரோடுஷோவுக்கு கூட்டம் கூட்டுவதற்கு இலைக்கட்சி நிர்வாகிகள் படாதபாடு பட்டுவிட்டார்களாம்.. கூட்டம் கூட்டுவதற்கான பொறுப்பும் அதற்கான செலவும் அந்தந்த மா.செ.க்கள் ஏற்றுக்கொள்ளனும்னு மேலிட உத்தரவாம்.. ஆனா மா.செ.க்கள் தங்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகள் தலையில் கட்டிவிட்டதால் கீழ்மட்ட நிர்வாகிகள் ஆட்களை பிடிக்க முடியாம திணறிவிட்டார்களாம்.. முதல்நாள் ரோடுஷோ கூட்டம் இல்லாததால் டென்சன் ஆன இலைக்கட்சி தலைவர் நிர்வாகிகளை கடுமையா எச்சரித்தாராம்.. அதற்கு பிறகு தான் இரண்டாவது நாள் கூட்டம் கூட்டுவதற்காக ரோடுஷோவில் பங்கேற்கும் அனைவருக்கும் குடம், தட்டு, சேலைன்னு கொடுத்து ஆட்களை திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.. மான்செஸ்டர் மாநகரில் இருக்கிற முக்கிய தொழிலதிபர்கள், பிரமுகர்களிடம் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்த முடிவு செய்திருந்தார்களாம்.. ஆனா முக்கிய பிரமுகர்கள் அவுட்ஆப் ஸ்டேசன், முக்கிய மீட்டிங் என காரணங்களை கூறி எஸ்கேப் ஆனதால் விஐபி சந்திப்பு நிகழ்ச்சி நடத்த முடியலையாம்.. அதற்கு பிறகு தான் தொழில் அமைப்புகளை சந்திக்கிற பிளான் தயாராச்சாம்.. ஆனா அந்த கூட்டத்திலும் முக்கிய தொழில் அமைப்பு நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லையாம்.. இப்படி ஒவ்வொரு பிளானும் சறுக்கலா போனதால இலைகட்சி தலைவர் டென்சன் ஆகி உள்ளூர் நிர்வாகிகளை கடிந்து கொண்டாராம்.. இலைக்கட்சி நிலவரம் இப்படி என்றால், இலையோட கூட்டணி வைத்திருக்க மலராத கட்சியோ முதல் நாளில் மட்டும் கலந்துகொண்டு காட்சியளித்தார்களாம்.. அடுத்த நாள் ஒருவர் கூட எட்டி பார்க்கலையாம்.. இதுவும் இலைக்கட்சி தலைவரை டென்சன் ஆக்கி இருக்கு.. சுற்றுப்பயணத்தின் தொடக்கமே இப்படி இருக்குதே இன்னும் தென்மாவட்டங்கள் எல்லாம் எப்படி இருக்குமோ என்ற கவலை இலைக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமெரிக்காவில் வசிப்பவரின் வீட்டை அபரிக்க முயன்ற இலை கட்சியின் மகளிர் நிர்வாகி மேல ஏராளமான புகார்கள் பறக்குதாமே..’’ என்றார் பீட்டர் ம ாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் இலை கட்சியின் மகளிர் பொறுப்பில் உள்ள மாநில நிர்வாகி ஒருத்தர் நகரின் மைய பகுதியில் உள்ள அமெரிக்காவில் வசிக்கின்றவரின் வீடு ஒன்றை வாடகைக்கு கேட்டு, வீட்டை பார்க்க வேண்டும் என்று சாவியை பெற்று கீழ்மாடியில் குடியிருந்து வந்தாராம்.. பின்னர் முறையாக வாடகை கொடுக்காமல் வீட்டை அபகரிக்கும் நடவடிக்கையில் இறங்கினாராம்.. இதற்கு உரிமையாளர் எதிர்ப்பு தெரிவிக்கவே, வீட்டை காலி செய்வதில் பிரச்னை ஏற்பட்டு, விஷயம் காவல்நிலையத்திற்கு சென்றதாம்.. அந்த பெண் நிர்வாகி ஏற்கனவே சுய உதவிக்குழு பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றியதாக ஏராளமான புகார்கள் கலெக்டரிடம் சென்றதாம்.. அவையும் நிலுவையில்தான் இருக்காம்.. ஆனாலும், எல்லாவற்றிலும் தன்னை இலை கட்சி நிர்வாகி என்று கூறி தப்பிக்க பார்க்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலத்துக்காரரின் எழுச்சி பயணத்துக்கு லகரத்தை இறைத்து கூட்டம் சேர்த்தாங்களாமே மாவட்ட நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘எலக்‌ஷன் நெருங்கும் நிலையில் இலை கட்சியில் சேலத்துக்காரர் எழுச்சி பயணத்தை தொடங்கி உள்ளார்.. செல்லும் இடத்தில் எந்த டாபிக் பேசுவதென்று தெரியாமல் விழிபிதுங்கிவரும் அவருக்கு, தேர்தல் வியூகவகுப்பாளர் எழுதி கொடுக்கும் கடிதத்தை படித்துவிட்டு செல்கிறாராம்.. இதனால் எழுச்சி பயணத்தில் மக்களிடையே வரவேற்பு இல்லையாம்.. சாலையில் செல்பவர்களையெல்லாம் கூப்பிட்டுவச்சி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டாராம்.. இதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூட்டம் நிரம்பிவழியனும்முன்னு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்காராம்.. அதன்படி புரம் என்று முடியும் மாவட்டத்தில் கடந்த 2 நாளாக நடந்த சேலத்துக்காரரின் 2 நாள் எழுச்சி பயணத்திற்கு ஊர், ஊராக சென்று இலைகட்சி நிர்வாகிகள் ஆட்களைதேடி புக்செய்து அழைத்து வந்துள்ளனராம்.. ஒரு வேனுக்கும், அதில் வரும் ஆட்களுக்கும் கூலியை நிர்ணயித்து லகரகணக்கில் செலவழித்து கூட்டத்தை கூட்டி காட்டினராம் மாவட்ட தலைமை நிர்வாகிகள் என ஊர் முழுவதும் பேச்சா இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா..

Advertisement

Related News