நீதிபதிகள் செயல் இயல்பானதா? பிரகாஷ்ராஜ் கேள்வி
சென்னை: நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,‘செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது,’ என தெரிவித்துள்ளார். மற்றொரு எக்ஸ் தள பதிவில்,‘உச்ச நீதிமன்ற நீதிபதி, சீனாவை பற்றி பேச வேண்டாம் என்கிறார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, பாலஸ்தீனியர்களை பற்றி பேச மறுக்கிறார். பெங்களூரு நீதிபதி, தர்மஸ்தலா வழக்கை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இது அனைத்தும் தற்செயலாக நடந்தவையா அல்லது இயல்பான நிகழ்வா,’ என கேள்விகளை எழுப்பியுள்ளார்.