தாமிரபரணி தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு 1 லிட்டர் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்வதா என நீதிபதிகள் அதிர்ச்சி
Advertisement
மதுரை: தாமிரபரணி தண்ணீரை தனியார் நிறுவனங்களுக்கு 1 லிட்டர் ஒரு பைசாவுக்கு விற்பனை செய்வதா என நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்கும் நிறுவனங்களிடம் இருந்து தண்ணீர் வரி பாக்கியை வசூலிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தண்ணீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியை ஆற்றின் பாதுகாப்பு, புனரமைப்புக்கு பயன்படுத்த வேண்டும். 20 ஆண்டாக தண்ணீர் விலையை உயர்த்தாதது ஏன் எனவும் தாமிரபரணியில் இருந்து எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது என்பது குறித்து நெல்லை
மாவட்ட ஆட்சியர் பதில் தர ஆணையிட்டுள்ளது.
Advertisement