ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் உடலுக்கு காவல்துறை மரியாதை... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
நீதியரசர் திரு. எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள். 1988 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர். 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அன்னார் நீதி துறைக்கும். மாநிலத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல் துறை மரியாதையுடன் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.