மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு கடும் எதிர்ப்பு
03:11 PM Oct 04, 2024 IST
Share
Advertisement
சென்னை : மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு எதிராக வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்ற வழக்கறிஞர்கள் மீதும், வழக்கு தொடுத்தவர்களுக்கு எதிராகவும் இதுபோல வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.