நீதிபதிகளில் அல்ல நீதியில் கடவுளை பாருங்கள்: உச்சநீதிமன்ற அமர்வு கருத்து
Advertisement
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘தனது கட்சிக்காரர் தனக்கு செவிசாய்க்கவில்லை என்றும் அதனால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மூலமாக சரிசெய்யப்படுகிறார்கள் என்று கூறி வாடிக்கையாளர் நோட்டீஸ் பெற்றதாகவும் கூறினார். இது மிகவும் அவமதிக்கும் செயலாகும் என்றும், சில நேர்மையின்மையை கண்டால் வழக்குகளில் இருந்து நாங்கள் விலகுகிறோம், நீதிபதிகளில் நாங்கள் கடவுளைப் பார்க்கிறோம்” என்று கூறி வருத்தப்பட்டார்.
அப்போது பேசிய நீதிபதி சுந்தரேஷ், ‘‘எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். தயவு செய்து நீதியில் கடவுளை பாருங்கள் என்று குறிப்பிட்டார். வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டனர்.
Advertisement