தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா புகார்!

 

Advertisement

சென்னை: நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். பிரபலங்களின் வீட்டு சமையல் என்றாலே அது மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் என சொல்லும் அளவுக்கு பிரபலமடைந்தவர் ரங்கராஜ். இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'மெஹந்தி சர்கஸ்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி பெயர் ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜாய் கிரிஸில்டா, திரை பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர், 2018ம் ஆண்டில் பொன் மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக் என்பவரை திருமணம் செய்தார். 2023ம் ஆண்டு, இவர்கள் பிரிவதாக அறிவித்தனர்.

சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார். திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 7 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற விவாதம் இணையத்தில் வைரலானது. சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து போட்டோவையும் டெலிட் செய்துள்ளார். இந்நிலையில், நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா என்பவர் புகார் அளித்துள்ளார். சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

 

 

Advertisement

Related News