ஜாய் நோக்கம் இதுதான்.. டபுள் கேம் ஆடுறார்; எல்லாமே பணத்துக்காக: ஆதாரம் வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி!!
சென்னை: எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது, எங்களை பிரிப்பதுதான் ஜாஹ் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். மகளிர் ஆணையத்தில் என்னை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்துடன், குழந்தையின் தகப்பன் தான் தான் என்பதையும் ஒப்புக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ் என்று தெரிவித்தார் ஜாய் கிரிசில்டா. இதையடுத்து ஜாய் கிரிசில்டாவுடன் நடந்த திருமணம் தன்னிச்சையானது இல்லை என்றும், மிரட்டி நடத்தப்பட்டது என்றும் கூறி அறிக்கை வெளியிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து அது தன் குழந்தை என்று நிரூபிக்கப்பட்டதால் காலம் முழுக்க பார்த்துக்கொள்ள தயார் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதையடுத்து மூன்று வீடியோக்கள் வெளியிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வதில் உண்மை இல்லை என்றார் ஜாய். இதையடுத்து இத்தனை மாதங்களாக அமைதியாக இருந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி முதல் முறையாக அறிக்கை மட்டும் அல்ல சில ஆதாரங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அவர் கூறியதாவது; எனது கணவர் ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது, எங்களை பிரிப்பதுதான் ஜாஹ் கிரிசில்டாவின் நோக்கம். எனது கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கிறேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன். சட்டப்பூர்வ மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை கெடுப்பதுதான் ஜாய் கிறிசில்டாவின் நோக்கம். தனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம், யாரையும் பிரிக்க விரும்பவில்லை என ஜாய் கிறிசில்டா கூறுகிறார்.
எங்கள் குடும்ப அமைதியைக் குலைப்பதுதான் ஜாய் கிறி சில்டாவின் நோக்கம். ஜாய் கிறிசில்டா ஊடகங்களை தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்துக்காக பயன்படுத்துகிறார். ஜாய் கிறிசில்டாவின் சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது. தான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை என்று கிறி சில்டா கூறினாலும் அவரது கடிதம் நேர்மாறான உண்மையை வெளிப்படுத்துகிறது. ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவகாரத்து கொடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறியுள்ளார் ஜாய் கிறிசில்டா. மாதம் ரூ.8 லட்சம் வழங்க வேண்டும் என்பதுடன், உடனடியாக ரூ.10 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். ரங்கராஜ் தனக்கு ஒரு வீடு வாங்கித் தர வேண்டும்; மாதம் ரூ.8 லட்சம் தர வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், ஜாய் கிறிசில்டா எழுதிய கடிதம், வாட்ஸ் ஆப்பில் நடந்த தகவல் பரிமாற்றத்தை ஸ்ருதி பிரியா வெளியிட்டார்.