ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் ஒருவார உண்டு உறைவிட பயிற்சி பட்டறை
சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப்பணி கல்லூரி ஆகியோருடன் இணைந்து இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் "ஒரு வார உண்டு உறைவிடப் பயிற்சி பட்டறை" கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் நவம்பர் 10 முதல் 18 வரையில் 9 நாட்கள் நடைபெறுகிறது.
பயிற்சியை நிறைவு செய்யும் 26 பங்கேற்பாளர்களில் 15 பங்கேற்பாளர்களுக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்கள் ரூ.20,000/- ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முறை திறன் மற்றும் சமூகத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது, சென்னை இதழியல் கல்வி நிறுவனம், மற்றும் சமூகநீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப்பணி கல்லூரி ஆகியோருடன் இணைந்து"இதழியல் மற்றும் ஊடகவியல் துறையில் "ஒரு வார உண்டு உறைவிடப் பயிற்சி பட்டறையை கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் நவம்பர் 10 முதல் 18 வரையில் 9 நாட்கள் நடத்துகிறது.
இப்பயிற்சியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 26 இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பெற்ற பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பங்கேற்று பயிற்சி பெற இருக்கிறார்கள்.
இந்த சிறப்பு திட்டமானது, சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு குரல் கொடுக்க ஊடகத்தை ஒரு சமூக மாற்ற கருவியாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஊடக உலகில் திறமையுடன் நுழைய தேவையான எழுத்து, காட்சி, ஒலி மற்றும் டிஜிட்டல் ஊடகத் திறன்கள் பயிற்சியாக வழங்கப்பட உள்ளன.
* முக்கிய அம்சங்கள்:
பங்கேற்பாளர்களுக்கு சென்னை இதழியல் கல்வி நிறுவனமானது நேரடி சிறப்பு பயிற்சி வகுப்புகளை தமிழ்நாட்டில் அனுபவமுள்ள மூத்த பத்திரிகையாளர்கள், நிருபர்கள், எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், தரவு இதழியல் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு நடத்துகிறது.
அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செய்தி உருவாக்கும் நடைமுறை பயிற்சிகள் மற்றும் செய்முறை வகுப்புகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
குறிப்பாக வீடியோ எடிட்டிங், பாட்காஸ்டிங், செய்தி தொகுப்பு, தரவு இதழியல் தொழில்நுட்பப் வழங்கப்படுகிறது. பயிற்சி ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியை நிறைவு செய்யும் 26 பங்கேற்பாளர்களில் இருந்து 15 பங்கேற்பாளர்களுக்கு முன்னணி ஊடக நிறுவனங்களில் இரண்டு மாதங்கள் ரூ.20,000/- ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியானது பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகத்தினரின் குரலை பதிவுசெய்யும் பிரதிநிதிகளாக இளைஞர்கள் ஊடகத் துறையில் பணிபுரியும் வாய்ப்பையும், சமூக நீதி, சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் பாகுபாடின்றி வாழும் சம உரிமை போன்ற கோட்பாடுகளைச் சமூகத்தில் வளர்த்தெடுக்கக் கூடிய சமூக பொறுப்புடன் கூடிய இதழியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது