வீட்டை அபகரிக்க முயற்சிப்பதாக ஜான்பாண்டியன் மீது வழக்கு: நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
Advertisement
இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது வீட்டை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு என் உயிருக்கு அச்சுறுத்தலில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் புகாரின் மீது 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பி.புகழேந்தி, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.
Advertisement