புதுச்சேரியில் புதிய அமைச்சராக ஜான்குமார் வருகிற 14ம்தேதி பதவியேற்கிறார்: 3 நியமன எம்எல்ஏக்களும் ெபாறுப்பேற்பு
Advertisement
இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிப்பதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை செயலருக்கு வந்துள்ளது. அதேபோல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் பிரவீன்குமார் ராஜியிடமிருந்து தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் 3 நியமன எம்எல்ஏக்களான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதம் நேற்று கவர்னர், தலைமை செயலகத்துக்கு வந்தது. இதையடுத்து அமைச்சர் ஜான்குமாரும், 3 நியமன எம்எல்ஏக்களும் வருகிற 14ம்தேதி பதவியேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜான்குமாருக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதேபோல் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் செல்வம், பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
Advertisement