தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய மெடிக்கல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. அசிஸ்டென்ட்: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது; 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
2. அப்பர் டிவிசன் கிளார்க்: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 27க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3. லோயர் டிவிசன் கிளார்க்: 10 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. வயது: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.2000/-. எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு ரூ.1,600. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.icmr.gov.in அல்லது www.nirt.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (14.08.2025).