தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.14 கோடி மோசடி: காஞ்சிபுரம் ஏஜென்ட் குண்டாசில் கைது தலைமறைவான மனைவி, தாய்க்கு வலை

நாகப்பட்டினம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.1.14 கோடி மோசடி செய்த காஞ்சிபுரம் ஏஜென்ட் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம்நகரை சேர்ந்தவர் கிருபாகரன்(37). இவரது மனைவி செந்தூர்தேவி, தாய் தனக்கொடி.

Advertisement

வெளிநாட்டுக்கு வேலைக்காக ஆட்களை அனுப்பும் ஏஜென்ட் தொழில் செய்து வரும் இவர்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கல்லரைத்தோட்டம் உப்பளம் ரோட்டை சேர்ந்த பானுமதி என்பவரிடம் ரூ.4லட்சம் மற்றும் ராஜாவிடம் ரூ.4 லட்சம், பாண்டிம்மாளிடம் ரூ.4 லட்சம், அஜித்குமாரிம் ரூ.5 லட்சம், தமிழ்மணியிடம் ரூ.10 லட்சம்,

இளையராஜாவிடம் ரூ.6 லட்சம், தர்மராஜிடம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம், இன்பராஜிடம் ரூ.5 லட்சம், மனோகரனிடம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.47லட்சத்து 60 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அர்மேனியா நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு 9 பேரும் பல மாதங்கள் உணவு இருப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். பின்னர் 9 பேரும் கடந்த மே மாதம் சொந்த ஊர் திரும்பினர். இதில் பாதிக்கப்பட்ட 9 பேரும் நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இவர்கள் 3 பேரும் அரியலூரை சேர்ந்த உதயசந்திரன், தம்பிக்கோட்டையை சேர்ந்த லதா, வைஜெயந்திமாலா, ரத்தினசபாபதி ஆகிய 4 பேரிடம் ரூ.59 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும், மேலும் மதுரை கோச்சடை அன்னை பாரத்தைசேர்ந்த வீரசெல்வி மகன் பிருத்விக்கு கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகினர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்ய காவல் துறை சார்பில் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இலங்கைக்கு கப்பலில் செல்வதற்காக நாகை துறைமுகத்துக்கு கிருபாகரன் வந்த தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதுதொடர்பாக அவரிடம் விசாரணைக்கு பின்னர், எஸ்பி செல்வகுமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்படி கிருபாகரன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கிருபாகரனின் தாய் தனக்கொடி மற்றும் அவரது மனைவி செந்தூர் தேவி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் மீது சென்னை மாம்பலம் காவல் நிலையம், நெய்வேலி நகர காவல்நிலையம் மதுரை சிலைமான் காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement