Home/செய்திகள்/Jharkhand Ranchi State Special Police Force Dharna Protest
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில சிறப்பு காவல்படை அதிகாரிகள் தர்ணா போராட்டம்
11:34 AM Jul 08, 2024 IST
Share
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் மாநில சிறப்பு காவல்படை அதிகாரிகள் சட்டமன்ற பேரவை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஞ்சியின் மொராபாடி மைதானத்தில் போராட்டம் நடத்தி வந்த போலீஸ் அதிகாரிகள் சட்டப்பேரவை அருகே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு காவல்படை அதிகாரிகள் போராட்டம் நடத்துகின்றனர்.