சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு வீட்டை திறந்து நகை திருட்டு
Advertisement
அண்ணாநகர்: அரும்பாக்கம் வள்ளுவர் சாலை, ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் விமலா. இவர், தனது வீட்டு சாவியை ஜன்னல் ஓரமாக உள்ள ஆணியில் மாட்டி வைப்பது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்ம நபர், நேற்று முன்தினம் இரவு, அந்த சாவியை எடுத்து, வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது விமலா மற்றும் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களது அறையின் கதவை வெளிபக்கமாக பூட்டிவிட்டு மற்றொரு அறையில் இருந்த பீரோவை திறந்து 3 சவரன் நகை, ரூ.90 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்த விமலா, இதுகுறித்து கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Advertisement