ஜெருசலேமில் பஸ் மீது துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, 15 பேர் காயம்
ஜெருசலேம்: ஜெருசலேமில் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஜெருசலேமில் அமைந்துள்ள யூத குடியிருப்புக்களுக்கு செல்லும் சாலையில், வடக்கு நுழைவாயிலில் நேற்று காலை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மற்றும் அங்கிருந்த பேருந்து மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பாலஸ்தீனியர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.
மேலும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். மேலும் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் இருந்த ஒரு வீரர் உட்பட இரண்டு பேர் தாக்குதல் நடத்தியவர்களை சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடந்த இரண்டு மணி நேரத்துக்கு பின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்திற்கு வந்தார்.
துப்பாக்கி சூட்டை அடுத்து நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். வேறு யாரேனும் அங்கு பதுங்கி உள்ளனரா அல்லது வெடிப்பொருட்கள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை நடத்தினார்கள். இந்த சம்பவத்துக்கு ஹமாஸ் பொறுப்பேற்கவில்லை. எங்கள் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கான இயற்கையான பதில் என்று பாராட்டியுள்ளது.