தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஜேஇஇ தேர்வில் வெற்றி வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளுக்கு திருச்சி என்ஐடியில் சீட்: கலெக்டராவதே லட்சியம் என உருக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகளான மாற்றுத்திறனாளி மாணவி ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் உற்பத்தி பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒய்யம்புலி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் - கவிதா தம்பதியின் மகள் ஆர்த்தி. மாற்றுத்திறனாளியான ஆர்த்தி சேத்தூர் சேவுகபாண்டியன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயின்று அங்குள்ள ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
Advertisement

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சென்னையில் பயிற்சி பெற்று ஜேஇஇ தேர்வெழுதிய மாணவி ஆர்த்தி 58.52 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். தற்போது அவர் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் உற்பத்தி பொறியியல் படிக்க தேர்வாகியுள்ளார். தந்தையின் ஆதரவு பெரிதளவு இல்லையென்றாலும், வீட்டு வேலை செய்தும் ஹோம் செவிலியராக பணியாற்றியும் மகளின் கனவை நிறைவேற்றியுள்ள தாய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதே வேளையில் குடும்ப சூழலையும், தாயின் ஆதரவையும் கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி ஜேஇஇ தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.

மாணவி ஆர்த்தி கூறுகையில், ‘‘நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றதே எனது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இதேபோல் மாணவிகளும் பல்வேறு நுழைவுத்தேர்வுகளில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். மாற்றுத்திறனாளியாக பல்வேறு கஷ்டங்களை சந்தித்த எனக்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இதோடு எனது இலக்கை நிறுத்தி கொள்ளப் போவதில்லை, யுபிஎஸ்சி தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்றார்.

ஆர்த்தியின் தாய் கவிதா கூறுகையில், ‘‘ஆர்த்தியின் தாத்தா சிறு வயது முதல் அவரை பராமரித்து ஊக்கமளித்து வந்தார். அவரது ஆசையை ஆர்த்தி நிறைவேற்றியுள்ளார். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடு அவருக்குத் தெரியாத அளவிற்கு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டடேன். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகள் ஆர்த்தி பெற்றுள்ள வெற்றி மிகுந்த பெரும் மகிழ்ச்சியை தருகிறது’’ என்றார்.

Advertisement

Related News