ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜன.24ல் நேரில் ஆஜராக உத்தரவு
இந்நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் தரப்பில் ஆஜரான வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,’ உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். ஆகவே ஒரு மாதகாலம் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’ என்று கூறினார். அதையேற்க மறுத்த நீதிபதி மோகன், ‘இது இன்று, நேற்று நடக்கும் வழக்கல்ல. 20 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது.
‘‘சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த அசையும் சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கும் முடிவில் நீதிமன்றம் உறுதியாகவுள்ளது. நாங்கள் சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் வேண்டுமானால் முறையிட்டு பெற்று கொள்ளுங்கள்’’ என்று கூறி விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் ஆஜராக வேண்டும் என்றார்.