தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்பதா? அண்ணாமலை அறியாமையில் பேசுகிறார்: நீண்ட நாட்களுக்கு பிறகு சசிகலா வாய்ஸ்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை அறியாமையில் குறிப்பிடுவதாக சசிகலா குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவது அவருடைய அறியாமையை காட்டுவதோடு தவறான புரிதலைதான் வெளிப்படுத்துகிறது.
Advertisement

அவர், சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மக்கள் தலைவர். பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடியவர் ஜெயலலிதா என்பது நாடறிந்த உண்மை.

சாதி மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட தன்னை அர்ப்பணித்தவர். தமிழக மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். மக்களுக்கு கொடுத்துள்ள திட்டங்கள் பயனளித்து வருகிறது. பெண்ணினத்திற்கான பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதேசமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. அனைவரையும் சமமாக மதித்த ஒரே ஒப்பற்ற தலைவியாக வாழ்நாள் முழுவதும் இருந்தவர். அவரது ஆட்சி காலங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதுகாப்போடு இருந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News