ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அப்பல்லோவில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள், சந்தேகங்கள் : சிபிஐ விசாரணை கோரி மனு!!
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா மருத்துவமனையில் செயற்கை சுவாசம் பெற்று இருந்த காலத்தில், அதிகாரிகள், அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடந்தாக அறிவிப்புகள் வெளியாகின. இது எவ்வாறு சாத்தியம். அதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை மருத்துவமனைக்குள் அனுமதிக்காதது ஏன்?. 7 ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் சந்தேகம் நீடிப்பதால் அது குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அடுத்த 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.