ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு ஜனநாயகத்தின் ஆணிவேரை பாஜவும் தேர்தல் ஆணையமும் அசைத்துள்ளது
சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: பாஜ, தேர்தல் ஆணையம் இணைந்து மிகப்பெரிய தேர்தல் மோசடி செய்துள்ளதை ராகுல்காந்தி அம்பலப்ப டுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன பதில் சொல்லப் போகிறது?.
ஜனநாயகத்தின் ஆணிவேர் அனைவருக்கும் சமமான வாக்குரிமை. தேர்தல் ஆணையமும் பாஜவும் ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைத்துள்ளது என்பது ராகுல் காந்தியின் தரவுகளால் புலப்படுகிறது. தேர்தல் ஆணையத்தை தகுந்த வகையில் திருத்த வேண்டிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.