ஜப்பானின் புதிய பிரதமர் சானேவுக்கு மோடி வாழ்த்து
புதுடெல்லி: ஜப்பானில் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபாவுக்கு பதிலாக புதிய மற்றும் முதல் பெண் பிரதமராக சானே தகைச்சி பதவியேற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘ஜப்பான் பிரதமர் சானே தகைச்சியுடன் பேசினேன்.
Advertisement
புதிய பிரதமராக பதவியேற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும் பொருளாதார பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி இந்தியா- ஜப்பான் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை முன்னேற்றுவது குறித்து விவாதித்தேன். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு வலுவான இந்தியா -ஜப்பான் உறவுகள் மிக முக்கியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement