ஜப்பான் 2025 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டஹோண்டாவின் EV SUV மாடல்: வரும் 2027ல் இந்தியாவிலும், ஜப்பானிலும் விற்பனை
ஜப்பான்: ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை மின்சார வாகனமான புதிய EV SUV மாடல் அறிமுகப்படுத்தி உள்ளது. ஜப்பானின் பிரபலமான வாகன நிறுவனமான ஹோண்டா மோட்டார்ஸ் கம்பெனி தனது அடுத்த தலைமுறை மின்சார வாகனமான ஹோண்டா ஓ ஆல்ஃபா மாடலை அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜப்பான் 2025 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புதிய எலக்ட்ரிக் SUV 2027ம் ஆண்டில் இந்தியாவிலும், ஜப்பானிலும் விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்து ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கையில் இந்த மாடல் நகர வாழ்க்கையிலும், இயற்கை சூழலிலும் இணைந்து மனிதர்களின் தினசரி தேவைகளுக்கு பொருத்தமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவே ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மின்சார வாகனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் எங்கள் இலக்கு 2025குள் அனைத்து தயாரிப்புகளிலும் மற்றும் தொழில் சார் நடவடிக்கைகளிலும் கார்பன் நியூட்ரியலிட்டி அடைவதே என்று தெரிவித்தார். மின்சார வாகன சந்தை தற்போது சில சவால்களை எதிர்கொள்கிறது என்றாலும் நீண்ட காலத்தில் இது உலகம் முழுவதும் EV காலத்திற்கான மாற்றமாக மாறும் என்ற நம்பிக்கையா அவர் வெளிப்படுத்தினார். முன்னதாக அறிமுகமான ஹோண்டா ஓ சலூன், ஹோண்டா SUV மாடல்களுக்கு அடுத்ததாக இந்த ஹோண்டா ஓஏ மாடல் ஹோண்டா ஓ சீரிஸின் புதிய நுழைவு வாயிலாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல்களில் அனைத்தும் 2028 மார்ச் மாதத்திற்குள் ஜப்பான் சந்தையில் கிடைக்கும் என்றும் ஹோண்டா அறிவித்துள்ளது.