ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்..!!
ஜப்பான்: ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். E10 ஷின்கான்சென் புல்லட் ரயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான கூட்டாண்மையை இந்தியாவும் ஜப்பானும் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், இதன் மொத்த நீளம் 508 கி.மீ. ஆகும். அந்த வகையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.பிரதமர் மோடிக்கு ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் நரேந்திர மோடி வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோ சென்றடைந்து மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்திக்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன், பிரதமர் மோடி E5 ஷின்கன்சனின் எனும் அதிகபட்ச வேகம் கொண்ட மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் செண்டாய் நகரத்திற்குச் சென்றார். அதே நேரத்தில் ஜப்பானில் இன்னும் சோதனைகளில் உள்ள E10 ஷின்கன்சன் மணிக்கு 400 கிமீ வேகத்தில் இயக்கப்படும் புல்லட் ரயில் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், புல்லட் ரயிலை இயக்க பயிற்சி பெற்று வரும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.