ஏடிபி பைனல்ஸ் தொடர்: சின்னரிடம் சரண்டர் ஆன பெலிக்ஸ்
துரின்: டென்னிஸ் தர வரிசையில் முதல் 8 இடங்களில் அங்கம் வகிக்கும் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் 2வது ரேங்கிங்கில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், 8வது ரேங்கில் உள்ள கனடாவின் பெலிக்ஸ் அவுஜரை எதிர்கொண்டார். இதில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் சின்னர் எளிதாக வெற்றி பெற்றார். இவர் நாளை மறுதினம் நடக்கும் போட்டியில் 3வது ரேங்கில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 6வது ரேங்கில் உள்ள அமெரிக்காவின் டெய்லர் பிர்ட்சுடன் மோதுகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் இத்தாலியின் முசெட்டியை 3-6, 4-6 என்ற நேர் செட்களில் டெய்லர் பிரிட்ஸ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.