ஜம்மு காஷ்மீரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 சம்பவ இடத்திலேயே பேர் உயிரிழப்பு!
ஜம்மு-காஷ்மீர்: பட்காம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பட்காமில் உள்ள பலார் என்ற பகுதியில் நடந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் பலார் பகுதியில் நேற்று இரவு அதிவேகமாக வந்துகொண்டிருந்த டாடா சுமோ ரக எஸ்யூவி கார் ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தின் தீவிரத்தால் வாகனங்கள் உருக்குலைந்து போயின. மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய அரசியல் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"பட்காமில் நடந்த துயர விபத்தில் பல உயிர்கள் பலியாகியிருப்பது குறித்து முதல்வர் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் மருத்துவ வசதியையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கான காரணங்கள் குறித்து உடனடி மற்றும் விரிவான விசாரணை நடத்தப்படும்" என முதலமைச்சர் அலுவலகத்தின் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பட்காம் சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதால் நான் மிகுந்த வருத்தமடைகிறேன். துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.