ஜம்முவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி தலைவரும், எம்எல்ஏவுமான மெஹ்ராஜ் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டார். தோடா மாவட்டத்தில் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
2 ஆண்டுகள் வரை விசாரணை இல்லாமல் காவலில் வைக்க அனுமதிக்கும், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் தோடா தொகுதியில் பாஜ வேட்பாளரை தோற்கடித்து யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மிக்கான முதல் வெற்றியை பதிவு செய்தவர்.
Advertisement