ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி மனுவை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரிய மனுவை 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இவ்விவகாரத்தில் உரிய அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக 8 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்ற ஒன்றிய அரசு தரப்பு கோரிக்கையை ஏற்றுக் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சுட்டிக்காட்டி, ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை கவனிக்காமல் விட முடியாது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.