பீகாரில் ஆக.17 முதல் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி!!
02:36 PM Aug 14, 2025 IST
டெல்லி: மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் ஆக.17 முதல் வாக்காளர் உரிமை யாத்திரையை தொடங்குகிறார். ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிசெய்யும் யாத்திரையில் இளைஞர்கள் ஒன்றிணைவர். ஓட்டுத் திருட்டை தடுக்கவும் அரசியலமைப்பை காக்கவும் இளைஞர்கள் ஒன்று திரள்வர். வாக்குத் திருட்டை தடுக்கும் போராட்டத்தில் பீகார் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என ராகுல் தெரிவித்துள்ளார்.