தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஆன்​லைனில் தொடங்கிய ஜெய்​ஷ்-இ-​முகமது

 

Advertisement

புதுடெல்லி: இந்​தி​யா​வில் இருந்து காஷ்மீரை பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. பாகிஸ்​தானை தளமாக கொண்டு செயல்​படும் இந்த அமைப்பை, கடந்த 1999ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில் ஒரு​வ​ரான மவுலானா மசூத் அசார் தொடங்​கி​னார். இந்த அமைப்பு, 2001ம் ஆண்டு நாடாளு​மன்ற தாக்​குதல், 2019ம் ஆண்டு புல்​வாமா தாக்​குதல் உள்​ளிட்ட கொடூர தாக்​குதல்​களை நடத்​தி​யுள்​ளது. இந்​தியா மட்​டுமின்றி அமெரிக்​கா, இங்​கிலாந்து மற்​றும் ஐ.நா.சபை​யால் இந்த அமைப்பு தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த அமைப்பு, இம்​மாத தொடக்​கத்​தில் ‘ஜமாத்​-உல்​-​முமி​னாத்’ என்ற பெயரில் மகளிர் பிரிவை தொடங்​கியது. இந்​நிலை​யில் நிதி திரட்​டு​தல் மற்​றும் ஆள் சேர்ப்​புக்​காக ‘துஃபத்​-அல்​-​முமி​னாத்’ என்ற பெயரில் பெண்​களுக்​கான ஆன்​லைன் படிப்பை இந்த அமைப்பு தொடங்க உள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்​டாரங்​கள் கூறுகையில், ‘ஜிகாதி படிப்​புக்​கான மகளிர் சேர்க்கை ஆன்​லைனில் வரும் 8ம் தேதி தொடங்​கு​கிறது. பாட​வேளை ஒரு நாளைக்கு 40 நிமிடங்​கள் இருக்கும். இந்த பாட வகுப்புகள் மசூத் அசா​ரின் 2 சகோதரி​களான சாதியா அசார், சமைரா அசார் ஆகியோ​ரால் நடத்​தப்​படும்.

இந்த வகுப்​பு​கள், ஜமாத் உல்​-​முமி​னாத்​தில் பெண்​கள் சேருவதை ஊக்​குவிக்​கும். அசா​ரின் தங்கை சாதியா அசார், இதன் பொறுப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். பாடத்​திட்​டத்​தின் ஒரு பகு​தி​யாக, மசூத் அசார், அவரது தளப​தி​கள் உள்​ளிட்ட தலை​வர்​களின் குடும்ப பெண்​கள் ஜிஹாத் மற்​றும் இஸ்​லாம் தொடர்​பான கடமை​கள் பற்றி கற்பிப்​பார்​கள்’ என்று தெரி​வித்​தன. ஆன்​லைன் ஜிகாதி படிப்​புக்​காக ஒவ்​வொரு பெண்​ணிடம் இருந்​தும் 500 பாகிஸ்​தானிய ரூபாய் (இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.156) கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​பட உள்ளது.

Advertisement