ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் பறிபோன சிறுமி உயிர்: ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கேலி கிண்டலால் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அமிரா (வயது 9) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மாணவி நவம்பர் 1ம் தேதி, பள்ளி வளாகத்தில் உள்ள 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து மாணவர்கள் அந்த சிறுமையைக் கிண்டலடித்ததாகவும், ஆசிரியர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடந்த அன்றும், அந்தச் சிறுமி 4 முறை ஆசிரியரிடம் சென்று புகார் அளித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து புகார் அளித்ததற்கு “CO-edu என்றால் அப்படித்தான் இருக்கும்” என பள்ளித் தலைமை ஆசிரியர் பதில் அளித்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.